நிழற்படவி

உடையவளின் ஊடலிலே- நான்
உயிர் நொந்து போகையிலே,
முற்புதர் அருகினிலே
சிறு சத்தம் கேட்டனவே.....

எட்டி நின்று பார்க்கையிலே
மதிகெட்ட மாந்தர்கள்
மறைந்திருந்து பார்த்தனரே !!

புத்தி கெட்ட புதல்வர்கள்- தம்
புத்தி பேதழைத்து,
படம் பிடித்து நின்றனரே !!

ஊர் கதை வேண்டாமென்று- நான்
ஒதுங்கி நின்றேனே !!

இளம் சிறார் வன்கொடுமையும்
இளம் பெண்கள் தற்கொலையும் - என
அடுக்கடுக்காய் வன்மையை
உள் மனது எண்ணிடவே
கயவர் தம் சட்டையை
சீறி வந்து பிடித்தேனே !!

பிறர் கூடும் கூடல்களை
மறைந்திருந்து பார்த்திடும்
மானமற்ற மாந்தரே......

வலைதளத்தில் குடியேற்றி
அலைப்பேசியில் பதிவிறக்கி
வன்கொடுமை அத்துனைக்கும்
புதியதோர் விதை விதைத்தாய் ....

அறிவார்ந்த குழந்தைகள்
அறிவாற்றல் பெருக்கிடவே
வலைதளங்கள் நுழைகிறதே !!

விஷம் கக்கும் அனுகதிர் போல்
சிதறி கிடக்கும் குப்பைகளால்
பிஞ்சு மனம் யாவினிலும்
நஞ்சை அள்ளி தெளித்தீரே !!


படம் பார்த்து கதைச்சொன்ன
காலங்கள் கடந்து- இன்று
தடம் மாறி செல்கிறதே !!

உன் குணம் அத்தனையும்
நாய் குணம் - என்றுரைப்பின்
நன்றியுள்ள நாயினம்- பின்னாளில்
எனை வசை பாடிடுமே !!

உன் நாடு கெடுத்த நல்லவரே !!
உன் வீடு கெடும் நாள்
வெகு தொலைவில் இல்லை...

கழிவறை சுற்றும் கரபான்களே !
இன்று பள்ளியறை குடிபுகுந்தாய்-உன்னை
நசுக்கி அழித்து விடேல்
நாளை சிறார் பள்ளிக்கும் குடிபுகுவாய்.....

உன்னினத்தை அத்துனையும்
வேரோடு இனங்கண்டு,
அரபு நாடு கடத்திருவேன்....

மன்னரிடம் முறையிட்டு- உன்னை
பலி கெடா ஆக்கிடுவேன்.....

பல கோடி தாயினத்தின்
வேண்டுதலை நிறைவேற்றிடுவேன்....

அத்தனை அர்ச்சனையும்
முடிந்த பின்பு,
கரும்புள்ளியாய் உயிர்தெழுந்த-தமிழ்
தீச்சொல் சிறு தன்னை,
பயன் படுத்த மனமின்றி,
அன்னிய மொழியினில்
ஒன்றிரண்டு கடன் பெற்று
கயவர்களை வசை பாடிடவே
என் கண்ணம் சிவந்தனவே !! ???

ஏன்னென்று கேட்கும்முன்
தன் அலைபேசி காட்டினரே- கூடியிருந்த
பெண்ணினமும் அப்புதற்நோக்கி
ஆர்வமாய் பார்த்தனரே !!

குழம்பி நானும் பார்க்கையிலே,
அறைந்த சத்தம் கேட்டிடவே,
.
.
.
.

படம் எடுத்து திரும்பியதே,
நல்ல பாம்பும் !!! சாரை பாம்பும் !!!

எழுதியவர் : (11-Jun-15, 11:19 pm)
பார்வை : 104

மேலே