மழையழைப்புகள்-3

மழையழைப்புகள்-3

மழையில் நனைய மறுத்து நீ
கோயில் பிரகாரதிற்குள் நுழைகிறாய்
சாமி கோயில் வெளிவந்து
குழந்தைகளோடு நனைந்தாடிக்கொண்டிருக்கலாம்…

மழை இதமான ஒரு தாளத்தோடே
பெய்கிறது … இடைவெளிவிட்டு
ஓர் தேர்ந்த இசைக்கலைஞனைத் தேடிக்கொண்டிருக்கிறேன்
இசை பெயர்க்க மழையின் ஓசையை….
தெரிந்தால் கூட்டி வா

எழுதியவர் : ரிஷி சேது (12-Jun-15, 5:55 am)
பார்வை : 102

சிறந்த கவிதைகள்

மேலே