அலைந்துழல் தமிழ்
புலம்பெயர் தமிழனின்
புலங்களில்
தமிழ் புளுங்கியழுகிறது
பிறிதொரு நாட்டில்.
புலம்பெயரச் செய்யப்பட்ட
ஆங்கிலத் தமிழ்
கதறியழுகிறது
நம் நாட்டில்.
தமிழன்
என்று என்னிடம் சொல்லிவிடாதே.
ஆங்கில அமிலங்களை
அழகுத் தமிழில் கலந்து விட்டு
நுனி நாக்கில்
உச்சரிப்பை,
நொறுக்கிவிட்ட நாகரிக மனிதா!
நீ............,நீ
தமிழன் என்று சொல்லி விடாதே.