வள்ளுவத்தை மெல்லுவோம்

நன்றி நினை
நன்றல்லது நினையாதே

----------------------------------------

இனிய சொல் இருக்க
கல் பொருக்காதே

----------------------------------------

சின்ன உதவியாயினும்
உதவி பெரியவனாகு

----------------------------------------

காமம் மலர்
சிலருக்கே கனியும்

---------------------------------------

அகத்தில் அன்பிலால்
புறத்தில் புலால்

---------------------------------------

அன்பில்லா மனம்
பாலை மரம்

--------------------------------------

இடுக்கண் என்றதும் போ
இறந்தபின் அல்ல

---------------------------------------

பிறவி கடக்க
இறைவன் கட

-----------------------------------------

அருள் நெஞ்சம்
இருள் இறங்காது

------------------------------------------------

நாவை அடக்காதவன்
நாவால் அடிபடுவான்

--------------------------------------------

கற்ற மனம்
கட்டாயம் ஊறும்

-------------------------------------------

அடக்கம் உய்க்கும்
அடங்காமை மாய்க்கும்

--------------------------------------------

நல்லவனாய் வாழ்பவன்
நாதனாய் ஆள்வான்

--------------------------------------------

நான் எனாதவனை
நானிலம் தொழும்

--------------------------------------------

உள்ளத்தில் மாசின்மை
உலகத்தில் அறம்

--------------------------------------------

எழுதியவர் : Raymond (12-Jun-15, 3:57 pm)
பார்வை : 290

மேலே