சிறுமியின் குரல்
Birth day –க்கு Choclate குடுப்பாங்க,
நா குள்ளமா இருக்கிறதால,
எனக்கு
ஒன்னோ, ரெண்டோ,
தா கிடைக்கும்....
மண்ணுல விளையாடுவோம்..
அடிபட்டதுனா எச்ச தொட்டு
இல்ல ல..
மண்ணு எடுத்து வச்சுக்குவோம்...
.
வருசத்துல ஒரு தடவ சட்டை துணி
குடுப்பாங்க..
நாங்க
சண்ட போட்டு எடுக்குறதால,
சட்டை துணி கிளுஞ்சி போகிடும்.
ஆனாலும்
அத துணிய நா
என் friend கிட்ட காட்டி,
என்னோடது,
Super Design pa ன்னு சொல்லுவேன்,
என்னோட Friendum சிருச்சிகிட்டே,
என்னோடதுதான்
பெரிய சட்டைன்னு சொல்லுவா,
நாங்க friends ரண்டு பேரும்,
அந்த துணிய மாத்தி மாத்தி போட்டுக்குவோம்,
சாப்பிடும் போது சின்ன புல்லிங்க சாப்டட்டும்னு,
Wait - பண்ணி சாப்டுவோம்,
சில சமயம் சாப்பாடு இருக்காது,
.
அப்போ நாங்க பின்னாடி இருக்குற தோட்டத்துல,
யாருக்கும் தெரியாம,
மாங்க பருச்சி சாப்டுவோம்...
நல்லவங்க கெட்டவங்க தெரியாது..
எங்க பசி தீர்த்த சாமி எல்லாம் எங்க குலசாமிதான்..
சாமி கிட்ட
நா
பொண்ணும் பொருளும் கேட்கலையே..
பெத்தவ என்ன
கொன்னு புட்டு போகலையே
தேன்குரலில் அநாதை இல்லது சிறுமி...
இவள் கேட்பது உங்கள் உணர்வுகளை அல்ல...
உணவினை மட்டும் தான்