நீயும் நானும் யாரோ இன்று -போட்டிக் கவிதை

நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று..
அப்போது உனக்கு
இருபத்தொன்று
எனக்கு இருபது
என்றாலும் ..
உன் மீது காதல்
எப்படியோ வந்தது..
கைக்கிளை..
என்றனர் சிலர் ..
தேறாது..
என்றனர் சிலர்..
இனக் கவர்ச்சிதான்
என்றனர் சிலர்..
பிரிந்தாலும்..
நீ மறந்தாலும்..
காலம் பல கடந்தாலும்
திசைகள் மாறினாலும்..
ஏன்.. எப்படி..
இன்னும் நீ இருக்கிறாய்
என்னுள்ளே..
அணையாத தீபமாக..
பொய்யானது
மற்றவர் சொன்னது ..
இருந்தாலும் ..
எவர்க்கோ
உழைத்து நரை கூடி
உரு மாறி நீ இருந்தாலும்..
நீயும் நானும் யாரோ இன்று
நினைவில் வாழக் கற்றது நன்று!

எழுதியவர் : கருணா (15-Jun-15, 9:06 am)
பார்வை : 691

மேலே