உன்னைவிட என் காதல் அழகு 555
என்னவளே...
காதல் கடிதம் உனக்கு
எழுத நினைத்து...
தினம் எழுத்துகளை
சேர்த்தேன்...
விண்ணின் நட்சத்திரங்களை
எழுத்தாக பொருக்கி...
ஆகாய நீலத்தை
மையாக்கி...
வெண்மேக காகிதத்தில்
அச்சுகளாக்கி...
பிறை நிலவின் வெளிச்சத்தில்
கையெழுப்பமிட்டு...
கோவிலின் மணியோசைனையுடன்
உன்னை நான் தேடிவர...
உன் கால் கொலுசின்
ஓசைக்கே...
கர்வம்தானடி
என்னை கண்டால்...
நீ வாங்க
மறுத்துவிட்டாய்...
நான் தவறாமல் தொழுவது
உன் கொலுசின் ஓசையும்...
அதிகாலையில் நீ போடும்
மாகோலமும்...
உன்னைவிட உன்னை
நினைக்க வைத்த...
என் காதல் தாண்டி
அழகு...
தினந்தோறும்.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
