நிம்மதியான உறக்கம் - நிறைவான செல்வம் -12263

கனவு காணத் தெரிந்தவர்களுக்கு
கருப்பு நிறமல்ல - இரவு - எனவே
வானவில்லுக்கு ஏழு நிறம்தான் - ஆனால்
வளர்கின்ற இரவுக்கு கோடானு கோடி நிறம்...
இமைத் திரை மூடி இதய உலகை காண்கிறேன்
இனியது உலகம் இது என உணர்கிறேன்.....
இன்னலுக்குள்ளாகவோ இன்னல் செய்யவோ
இம்மானிடப் பிறப்பு அல்ல என உணர உணர....
இதமாக தென்றல் தழுவ
இப்போது உறங்கத் தொடங்குகிறேன்
வெகு இதமாக
வெகு இதமாக
வெகு இதமாக