மௌனத்தில் தவிக்கும் வலிகளுக்காக இதை சமர்பிக்கிறேன்

அதிகாலையில் பாதி உறக்கத்தில் எழுந்து
என் தூக்கம் மறந்து
உனக்காக சமைக்க ஓடினேன்
எனக்கும் ஆசைதான் உன்னைப்போல்
விடியும் வரை பஞ்சணையில் சாய்ந்திருக்க

குறுஞ்செய்தி அனுப்பும் நட்புக்களுக்கு
பதில் சொல்லாமல்
உள்ளம் நிறைந்திருக்கும் உறவுகளை மறந்து
உனக்காய் காத்திருப்பேன்...
நீ வந்ததும் உன் நண்பர்களோடு களிந்திருப்பாய்!
உன் முகம் பார்த்து
உன்னருகில் அமர்ந்திருக்கும் எனக்கு
என்ன அர்த்தமும் இல்லை..

பல நாட்களாய் நான் கேட்டு
அழைத்து செல்லாமல்
ஏதேதோ காரணமாய் தவிர்த்த சுற்றுலாக்கள்....
உன் நண்பர்களோடு
நீ போகும் போது
நான் புன்னைகையில் மலர்ந்து
கைகாட்ட எதிர்பார்கிறாய்..அங்கே
என் வேதனை என்ன என்பதை
நீ உணரவே இல்லை!

உன் நண்பர்கள் மத்தியில்
என்னை அவமதித்து,
அலைபேசியில் அன்பனவனாய் பேசுகிறாய்
அப்போது உன் அன்பில்
நான் முழுதாய் நனைய வேண்டும்..
என் கண்கள் குளமாய் இருப்பதை
உன் கண்கள் மறைத்ததும் ஏனோ?

என் மௌனம் ஒவ்வென்றும்
வலியில் சிவந்திருக்கும்!
எப்போதும் அலை பேசியில்
புன்னகைத்திருக்கும் உனக்கு
நேரம் எங்கே இருக்கிறது?!

ஒவ்வொரு முறையும்
பொய்யான நாடகங்களையே
அரங்கேற்றுகிறாய்
இதயத்தை கத்தியால் கிழித்துவிட்டு
சிரிக்க சொல்கிறாய்...

என் நண்பன் என்று சொல்கிறாய்
- ஆனால் என் நண்பன்
என் கடின காலத்தில்
உன்னை போல் மகிழ்ந்ததில்லை!

உன் தாயை போல் என்கிறாய்
என் தாய் உன்னை போல்
என்னை தனியாய்
தவிக்க விட்டதில்லை!

இத்தனையும் தாங்கி கொள்கிறேன்
உன் தாலியை சுமப்பதனால்.....

எழுதியவர் : நிலா (16-Jun-15, 11:51 am)
பார்வை : 94

மேலே