நக்கீரா
ஆயிரம்கால் மண்டபம்..
அர்த்த ராத்திரி..
கோயில் சுற்றி வந்த
களைப்பில்..
சப்பரம் ஒன்றின் பின்னால்
படுத்திருந்த நான்..
திடுக்கிட்டு விழித்தேன்..
ஒரு சப்தம் கேட்டு..
"என் பாட்டில் குற்றமா.."
மண்டபமே அதிர்ந்தது..
விளங்கவில்லை ஒன்றும்..
எட்டிப் பார்த்தேன்..
யாரையும் காணவில்லை..
கனவு..போலும்..
மீண்டும் படுத்துக் கொண்டேன்..
கண் விழித்து பார்த்தால்..
மன்னனின் முன் நான்..
எதிரே..இறைவனார்..
ஏதோ பின்னோட்டம் ஒன்றில்
குற்றம் கண்டு பிடித்து
எழுதி விட்டேனாம்..
சொல்லிலும், பொருளிலும்
என்ன குற்றம் கண்டீர்..
என்று அவர் கேட்கிறார்..
சொல்லுங்களேன்..
நீங்களாவது..
இது..
எங்க காலம் ..
சங்க காலம் ..
இல்லை.. என்று!
சார்..
என்னைக்
குளத்தில் தள்ளினாலும் சரி..
தளத்தில் தள்ளினாலும் சரி..
போட்ட பின்னூட்டம்
போட்டதுதான்..
நானே நினைத்தாலும்
நீக்க முடியாதது!
ஒரே ராவடியாப் போச்சு ..
உங்களோட ..
இதுல கருணாநிதின்னு
பேரு வேற..!