என்ன தவம்
எனதும்
உனதுமான
நிசப்த
பெருவெளிகள்
புணரும் தருணம்
மிகத்தொலைவில்!!
உன் சில
முத்தங்களும்
கோபங்களோடும்
கடத்தப்படும்
தனிமைகள்
எத்தனை கொடியது!!
இயந்திர
பொம்மையின்
இமைகளின்
கனவை
தென்றல்
உலர்த்துமா!
நிழல்களை
அறுத்தெறிந்து
உன்னை எனக்குள்
திணிக்க எத்தனித்த
பொழுதெல்லாம்
விம்பங்கள்
பசிதீர்த்துக்கொண்டன
என் இனிமைகளில்!!
முடிந்தால்
என்னை ஓர்
தனித்த காட்டில்
சிறைப்படுத்துங்கள்!!
அதோ என்
அறையின்
பாதி எரிகிறது
உனக்கான
காத்திருப்பு
கவிதைகளால்!!
எங்கு தேடுவேன்
எனை!
பிரபஞ்ச
மூலையொன்றில்
உதிர்ந்த
சிறகொன்றின்
அருகில் ஏதோ
உளற்றுகிறான்
அவன்!!
அவனை
சுற்றிலும்
என் விம்பங்களின்
நிழல்கள்!!
இனி தொலைக்க
படுதலுக்கும்
தேட படுதலுக்குமான
பெருவெளிகள்
எங்கு புணரும்!!
அடுத்த மழையில்
நீ நனையாதிருக்க
என்ன தவம்
புரிவது!