வேலையைப் பார்ப்போம்
ஒரு முடிவோடுதான்
இன்று வெளியில் புறப்பட்டேன்..
இன்றைக்கு எது நடந்தாலும்
கவலைப்படக் கூடாது..
என்று..
ரோட்டிலேயே லஞ்சம் வாங்கும்
மனிதர்களைப் பற்றியோ..
சாதி மாநாட்டுக்கு அழைக்கும்
போஸ்டர்களை பற்றியோ..
நீதித்துறை..போக்குவரத்துத்துறை..
டாஸ்மாக் ..அரசியலமைப்பு
என்று..
இன்று ஒரு நாள்..
ஒரே ஒரு நாள் ..
என்னைப் பற்றி மட்டும் ..
என்னைப் பற்றி மட்டுமே ..
எண்ணி இருப்பதென..
ஒரு முடிவோடுதான்
வெளியில் வந்தேன்..
அப்புறம்தான் ஞாபகம் வந்தது..
தினமும் இப்படித்தானே இருக்கிறோம்..
ஓ..அது இன்றுதான்
ஞாபகத்திற்கு வந்தது..
சரி..சரி..
வேலையைப் பார்ப்போம்!

