மனங்கவர் காதலி - 8
![](https://eluthu.com/images/loading.gif)
இருகண்மேல் மொய்த்தெந்தன்
புறப்பார்வை குருடாக்கிச்
சிறுகாது கூர்தீட்டிச்
சிறிதேனுங் கேளென்றாய்!
அகப்பார்வை காண்கின்றேன்,
அழுக்கன்றி வேறில்லை!
புழுக்கண்கள் மீதெல்லாம்
மருந்திட்டுக் காக்கின்ற
மறுஜென்மம் வாய்த்தது,
மகிழ்கிறேன் கண்மணீ!!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்