வேதியியல் பாக்கள் -சந்தோஷ்

மனமே.. மனமே
நீ எங்கு இருக்கிறாய்...?
இதயத்திலா...
உடலிலா .. ? - இல்லையென்
உயிரிலா..?


நீ என்பது எது?
நீ என்பது மூளையா ?
மூளையின் மடிப்பின்
செயலா..?
இல்லை இல்லை.
என் பெரு மூளைக்கண்ணில்
ஆயிரத்து நானூறு
கோடி நியூரான்கள்
நிகழும் வேதியியல்
எதிர் வினையா நீ..?

நீ எதுவாகவோ
இருந்துவிட்டுப் போ
மனமே..!
நித்தம் நித்தம்
அவள் நினைவுகளை
பரிந்துரைச்செய்து
வேதிவினையில்
ஹார்மோன்களை
இம்சை செய்து
இரத்த அணுக்களை
சூடேற்றி கிளறி விடாதே ...!

ஏனெனில் ,
பாவம்....வெற்றுத்தாள்கள்...
நானெழுதும் காதல் கவிதையிலிருந்து
தப்பித்துக்கொள்ளட்டும்.


----------------------------
அடியே கள்ளி
என்ன சிரிப்பு
கவிதை படித்து..?
என் எழுத்து என்ன
நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவா
உன்னை சிரிப்பூட்ட ?


----------------------
டியர் !
நாம் நீரின் மூலகூறு போல ..
ஆம்
நீயொரு ஹைட்ரஜன்
நானொரு ஹைட்ரஜன்
நம் காதல் ஒரு ஆக்ஸிஜன்.

----------------------


-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : -இரா.சந்தோஷ் குமார் (19-Jun-15, 6:41 pm)
பார்வை : 97

மேலே