விழி வழியே வேர் முளைக்கும்
அழுது தீர்த்த மேகத்தின்.., கடைசி துளிகளை, சிந்திக்கொண்டிருக்கும் சோலையிலே..,
எழுதுகோலை ஏமாற்றிவிட்டு, நான் எதையோ, கிறுக்கிக்கொண்டிருக்கும் வேளையிலே..,
உழுதும் விளையா மண்ணாய் போன, என் மனித மூளையிலே..,
விழுதும் வேராய் ஆன, ஆலமர நினைவுகள் ஆயிரம் கண்டேன்...
அங்கே,
மரம் கொட்டிய விதைகளை நான் கண்டதும்..,
அவை வேர்விட்டன என் விழிவழியே...
வரம் கிட்டிய அந்த நொடிகளை, எண்ணி முடித்ததும்..,
வேரருத்தன என் விரல்கள்...
நகரும் நேரங்கள், என்னை அங்கிருந்து நகர்த்த முயன்று முடிவில் வென்றது...

