அவளிடம்
அவளிடம் காதலுக்காக எழுதுகிறேன்
ஆழமாய் என் மனதில் அமர்ந்தவளே - உன்
இமைகளை கொண்டு என் மனதை இழைக்காதே
ஈரம் என்று ஒன்றை கண்டால் அது என் இதைய கண்ணீரே
உயிர் ஒன்று உள்ளது அது உனக்காக மட்டும் தான்- அதில்
ஊற்றாய் உன் நினைவுகள் மட்டும் - அழகே
எப்பொழுது ஏற்றம் தருவாய் உன்னுடன் வாழ்வதற்கு
ஏங்குகிறேன் என்றுமே உன்னை எண்ணி - என்னுடைய
ஐயம் எல்லாம் என்னுடைய காதலை எப்படி உன்னிடம்
சொல்வேன் என்பது தான்
ஒன்று மட்டும் நினைவுகொள் - நம் காதல்
ஓங்கி நிற்கும் காதல் சின்னமாக்கிவிடு - ஆம் என்றால்
ஔடதமாய் என் இதயத்தில் வந்து சேர்ந்துவிடு - இல்லையேல்
(எ)ஃகால் என்னை நினைவு சின்னமாக்கிவிடு. . . !!