காதல் தந்த மாற்றம்

சிறு விந்து சிசுவாகி என் தாயின் கருவறையை அடைந்தேன்.

எண்ணற்ற மகிழ்ச்சி என்னை ஈன்றெடுக்கும் தருணத்தில் கண்ணீராய் சிந்தினால் என் தாய்..

தன் உதிரத்தின் ஒரு பங்கிலிருந்து பாலூட்டி என் தேகத்தை வளர்த்தல் தான் பட்டினியாய் இருந்த போதிலும்..

அன்பெனும் ஊற்றால் என்னை அழகாய் வளர்த்தல்..

ஆனால் நானோ!

அலட்சியபடுத்திவிட்டேன்!!

என் தாயின் அன்பை உன் மீது கொண்ட காதல் மோகத்தால்..

முத்தமிட்டு என்னை வளர்த்தவளை மறந்து உன் முத்தம் நாடி அலைகிறேன்..

என்ன இது மாற்றம்?

எனக்காய் கண்ணீர் சிந்தும் என் தாயை மறந்து, என்னை கண்ணீர் சிந்தவைக்கும் பெண்ணை தேடியே என் மனம் துடிக்கிறது..

கஷ்டப்பட்டு வளர்த்தவளை மறந்து, உன் காதலால் கல்லறை செல்ல துடிக்கிறேனே

"இதைக்கூட
புரிந்துக்கொள்ள முடியவில்லையா என்னுயிர் காதலி"..

நொடி பொழுதும் உன் நினைவுகளில் நான்..

எழுதியவர் : Mathan kumar (22-Jun-15, 1:56 pm)
பார்வை : 159

மேலே