பிறந்தநாள்
நமக்கு பிடித்த ஆசிரியர்
பிறந்தநாள் நாம் கேட்டதில்லை.
நம் உடலை கவனித்து
நன்றாக்கும் மருத்துவர்
பிறந்தநாள் நாம் அறிந்ததில்லை.
முக்கியமான வரலாற்று
சிறப்பு தினங்களை
தெரிந்ததில்லை.
வருடம் முழுக்க நம்மை
பார்த்து பார்த்து
கவனிக்கும் அப்பா அம்மா
பிறந்தா நாள் அறிந்ததில்லை.
இந்த உலகத்தில் சமுதாய
மாற்றத்திற்க்காக போராடிய
வரலாற்று சிறப்புமிக்க
தலைவர்கள் பிறந்த நாளை
கேள்விபட்டதில்லை.
இப்படி வாழ்க்கை முழுக்க
நம்மை மகிழ்ச்சியாக
வைத்திருப்பவர்களை நாம்
கவனிப்பதில்லை.
நடக்கமுடியாத நடைமுறைக்கு
ஒத்துவராத நம்மை
3 மணி நேரம் அற்ப சந்தோஷத்தில்
நடிப்பவர்களுக்கு எத்தனை
பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
இதில் நடிகர்கள் யாரும்
விதிவிலக்கில்லை.
ஒரு அரைமணி நேரம்
வந்து நடித்து 1 வருடம் படத்தில்
நடிப்பவனுக்கு சம்பளம்
கோடிக்கணக்கில்,
நம்மை நாள் முழுக்க
தெருக்கூத்தில் மகிழ்வித்த
கலைஞர்கள் தெருக்கோடியில்
பிச்சை எடுக்கிறார்கள்
என்னடா உலகம்?