தானம் செய்வோம்

உடலில்மட்டும் ஊணம் கொண்டு வாழும்
உயர்ந்தோர் மத்தியில்
நன்றாக பிறந்தோம் நாம் மட்டும்..
செல்லரித்து போகும் உடல்
சிலர் ஆயுளை நீடிக்கும் ஆயுதமாகுமோ..
நெருப்பிற்கு இரையாகும் மெய்
சிலர் உயிருக்கு ஒளி ஆகிடுமோ ..
ஆம்..
நம் உள்ளத்தே எழும் ஓர் எண்ணம்
வடிவமிட்டால்
பலரின் வாழ்க்கையாகும் எழில் வண்ணம்..
மலடி மாறும் நேரமிது..
தானம் என்ற பெயரில் தாயாகலாம்
நாம் சுமக்காத பிள்ளைக்கும்..
கண்ணில் சுமக்கும் கருணை
கண்ணீரோடு ஓடிவிடும்
இதயத்தே சுமப்போம்
அனுதினமும் துடித்திடும்..
வாரீர்! இரக்கம் இறக்கவில்லை
உங்கள் இதயங்களில் இன்னும்
வாழத்தான் செய்கிறது..
இருப்பவர் செய்வார் பொருள்தானம்..
இல்லாதவர் செய்வார் ரத்த தானம்..
இறந்தபோது செய்வோம் மொத்தமுமே தானம்..

எழுதியவர் : தீபாகுமரேசன் (24-Jun-15, 10:42 am)
சேர்த்தது : தீபாகுமரேசன் நா
Tanglish : thaanam seivom
பார்வை : 170

மேலே