தந்தை
அருகில் இருப்பவர் ஒளிபெற
உருக துணியும் மெழுகு
விலகப் போகும் அம்புக்கு
உடலை வளைக்கும் நெடுவில் !!
பயனைக் கருதி உழைக்காமல்
கடமை செய்யும் விவசாயி !!
சன்மானம் எண்ணி செய்யாமல்
தன்திறன் காட்டும் கலைச்சிற்பி!!
மக்கள் நாளும் உய்வுபெற
நித்தம் நினைக்கும் மாமன்னன் !!
தியாக சின்னம் இவைஎன்றார்
தன்னுடை படைப்பில் சிறந்த
தென்று இவற்றை எண்ணி
தெய்வம் என்னிடம் புகழ்பாட
நானும் எனக்குள் மெல்லச்சிரித்து
உயிர் கொடுத்த காரணத்தால்
உயிர் உள்ள வரையிலும்
உழைக்க துணிந்த உள்ளம்!!
என்னை படைத்தது இது நாளும்
கண்போல் வளர்த்த முகத்தை
ஒருதரம் காட்டி மறைத்தேன்
மறுநொடி இறைவன் விழியில்
சீறிபாயும் வெள்ளம் கண்டேன்
எனக்கு வாய்த்த பேறுகண்டு
தனக்குள் பொறாமை போலும் !!!