உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 10
![](https://eluthu.com/images/loading.gif)
ஆயிரம் தோல்விகளை தோளில் சுமப்பேன்
ஆனாலும் உன் சிறிய
அலட்சியம் கூட என்னை
அளவிட்டு விடுமென்பதை அறிவாயா ? அழகே.
கண்ணை மூடிக்கொண்டு
உன் கைகளை பற்றிக் கொண்டு வரும்
என் கவிதைகளை தவறவிட்டு விடாதே..
தவறி விழுந்த சோகத்தில் அவை
தற்கொலை செய்து கொள்ளப் போகின்றன.
ஆம்
உன் விழிகளை தீண்ட வழி இல்லை
என்பதால் சில நேரங்களில்
என் கவிதைகள்
என் விரல்களை தாண்டி வர மறுக்கிறது..
நினைவில் வந்து எழுதும் முன் மறந்து போன
என் கவிதையை போல்...
பூ மலரும் முன் கருகிப் போன
ஒரு மலர் செடியை போல்
உன் உறவு தொலையப் போகிறதா..?
சொல்லடி... என் உயரப் பறக்கும் உயிரே..
என் கண்ணில் நீ விழாமல் இருக்க
எந்த விலங்கு எடுத்து பூட்டுவது
என் விழியை.
என் எண்ணத்தில் நீ வராமலிருக்க
எந்த நினைவு எடுத்து போர்த்துவது
என் மனதை.
அருகில் நீ வந்து
அமைதியாகச் செல்லும் போது
அனல் பட்ட புழுவாய்
அலறித் துடிக்கும் இந்த
அடிமை மனதின் ஏக்கம்
எப்போது நீயறிவாய் என்னுறவே...