முதல் இரவில்

கொஞ்சும் குரலினில்
நஞ்சை வச்சு
கொஞ்சம் கொஞ்சமா
கொள்ளை கொண்டாள்

பிஞ்சு விரலினில்
தீயை வைத்து
மஞ்சத்திலே
தஞ்சம் வைத்தான்

அஞ்சும் அனைப்பிலே
நெஞ்சம் வைத்து
கெஞ்சும் சுகத்திலே
மூழ்கடித்தாள்

பஞ்சும் நெருப்புமாய்
பற்றவைத்து
பொங்கும் பாலுடன்
சுவைக்கவைத்தான்

எழுதியவர் : அசுபா (24-Jun-15, 5:50 pm)
Tanglish : muthal iravil
பார்வை : 89

மேலே