​என் வாழ்க்கைப் பயணம் - 2​

முதல் பகுதியை வாசித்தவர்களுக்கும் கருத்து அளித்தவர்களுக்கும் முதற்கண் நன்றி .

அலறிய அலைபேசியை எடுத்தேன் .. என் நண்பர் ஒருவரின் பெயர் தெரிந்தது....சொல்லுடா என்றேன் ....
என்னடா எப்படி இருக்க ...அவன் உரிமையோடும் இரக்கத்தோடும் கேட்டான் ....ஏன் நல்லாதான் இருக்கிறேன் இப்போது என்றேன் .

என்ன விசேஷம் ..என்றேன். சும்மாதான் செய்தேன் என்றான் . நானும் சும்மாதான் இருக்கிறேன்
என்றேன் . ( காரைக்குடி நகரத்தார் பேசும்போது ' சும்மா ' இருக்கீங்களா என்று கேட்டால் , நலமா இருக்கிறீர்களா என்று அர்த்தம் )

என்னடா , எழுத்து தளத்தில் வாழ்க்கை கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டாய் என்று கேள்விப்பட்டேன் .....அவ்ளோ பெரிய ஆளா நீ என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ....நீயே சிரிக்கிறாயே ...அப்படினா நான் சாதாரண ஆள் தானேடா என்றேன் . ஏதோ கவிதையே எழுதிக் கொண்டிருப்பதால் . .. ஒரு மாறுதலுக்கு இதை எழுத ஆரம்பித்துள்ளேன் ..என்றேன் . வரவேற்பு எப்படி உள்ளது என்றான் . பரவாயில்லை எதிர்ப்பு இல்லை ...ஆனால் எதிர்பார்ப்பைவிட கூடுதலாக உள்ளது என்றேன் ...சரி சரி வாழ்த்துக்கள் என்றான் . இதை முதலிலேயே நேரிடையாக சொல்லி இருக்கலாமே என்றேன் ... அவன் உடனே சும்மாதான் ....எனக்கும் நேரம் போக வேண்டுமே என்றான் ...அடப்பாவி ....அலைபேசி இதற்கெல்லாம் கூட உதவுகிறதே ...என்று மனதில் நினைத்துக் கொண்டேன் .

எதையுமே படிக்கும்போது ஒரு சுவாரசியம் இருக்கவேண்டும் அல்லவா ... அதனால் இந்த அலைபேசி பேச்சையும் ( உண்மை) சேர்த்தேன் .

கடந்த 1958 ம் ஆண்டு , அக்டோபர் 12 ம் நாள் காலை சுமார் 10 மணி அளவில் , இந்த பூமியில் , இந்திய நாட்டில் , தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது .....வானம் வெளுத்தது ...மழையும் பெய்து ஓய்ந்திட்ட வேளையது ....அந்த நாள் ஒரு சுற்றிடும் பூமியே ஒரு நொடி நின்று மீண்டும் சுற்றத் தொடங்கியது ...அந்த இடைவெளியில்தான் அடியேன் பிறந்தேன் என்று சரித்திரம் கூறுகிறது . அதற்கான சென்னை மாநகராட்சி பிறப்பு சான்றிதழும் உள்ளது.

என்ன காரணமோ தெரியவில்லை ...எங்கள் தாத்தா ' பழனி ' எனும் திருநாமத்தைச் சூட்டினார் . நான்தான் பிற்காலத்தில் ' குமார் ' எனும் கூடுதலாய் சேர்த்துக் கொண்டேன் ..அதற்கான காரணத்தை பிறகு சொல்கிறேன் ......

மீண்டும் சந்திக்கிறேன் ....

பழனி குமார்
26.06.2015

எழுதியவர் : பழனி குமார் (26-Jun-15, 2:42 pm)
பார்வை : 157

மேலே