M N C பன்னாட்டு கம்பெனியும் இந்நாட்டு இளைஞனும்

சூரியனைக் கேட்டேன்
சந்திரனையும் கேட்டேன் !
பகலில் நானும் இரவுக்கு அவனும்
சுழற்சி மாறாமல் சுழல்கிறோம் என்றது !

மரத்தை மட்டுமா ! புல்லையும் பூண்டையும்
செடியையும் கூட கேட்டேன் ! உறங்கும் நேரம் எதுவென்று !
இரவிலே இமை போன்ற இலைகள் .
கவிழ்ந்து கிடப்பதை வந்து பார் என்றது !

எறும்பைக் கேட்டேன்
யானையையும் கேட்டேன் !
உறங்கும் நேரம் எதுவென்று...
உருவானது முதலே இரவுதான் என்றது !

அறுபதைக் கேட்டேன்
எழுபதையும் கேட்டேன் !
இரவில் உறங்கி பகலில் உழைத்தோம்
இயல்பாய் இயற்கையோடு வாழ்கிறோம் என்றார்கள் !

இரவில் பன்னாட்டுக்கு உழைத்தவன்
விடியலில் எழுந்துவந்த
சூரியனுக்கு குட்நைட் சொல்லிவிட்டு
சோர்ந்து படுக்கிறான் ! நேற்றுவரை

காலை ஐந்தில் பல் துலக்கியவன்
மாலை ஐந்தில் துலக்குகிறான்!
டீ காபி சிற்றுண்டி மட்டுமல்ல
மதிய உணவும் மாலைதான்

உறக்கமில்லாமல் ! உடலும் மனமும்
உழன்று போக! வாங்க சார் டென்ஷனுக்கு
லைட்டா...!! என்று தொடங்க அதுவே
புலிவால் பிடித்த கதையாக !

அவுட்சோர்சிங் என்ற பெயரிலே
இளஞர்களின் இன்சோர்ஸ் எனும்
மகாபெரிய பலத்தை !
இழந்துகொண்டிருக்கிறது இந்தியா!

அன்று நாற்பதேழுவரை ஆண்டதும் மாண்டதும்
அதே அவுட்சோர்ஸ்தான்! - இன்றோ
மாண்டவன் மீண்டதுபோல வேறுபல ரூபங்களில்
இளஞர்களை இரவுநேர அடிமைகளைபோல
உயர்தர செச்கிழுக்க வைக்கிறார்கள் !

இயற்கையின் சுழற்சியில் முரண்படும்
இவர்கள் ஆக்சிஜனுக்கு பதிலாக
ஆகாத காற்றை அறிந்தே சுவாசிப்பதுதான்!
இளைஞர் சமூகத்தின்மேல் விழுந்த கொடுமை !

யாரோ உறங்க இவன் கண்விழிக்கிறான்

எழுதியவர் : சமூக ஆர்வலர் அலெக்சாண்டர (26-Jun-15, 9:11 pm)
பார்வை : 79

மேலே