காலைச் சாரல் 07 - இரவு

27-06-2015
அதிகாலை தோன்றிய எண்ணங்கள்.

அதிகாலை சூரிய உதயத்துக்கு சற்று முன்....

மாடத்தில் (Balcony) வந்து அமர்ந்தபின் இன்று ஒன்றும் எழுதக் கூடாது என்று நினைக்கும் பொழுதே தன்னை அறியாமல் கையில் TAB... நல்ல வேளை 'சார்ஜ்' இல்லாமல் செத்துப் போயிருந்தது... அதைச் 'சார்ஜில்' வைத்து விட்டு மீண்டும் மாடம்...

****

எப்போழுதும் போல் அந்த வேப்ப மரம் தலையாட்டி(குலுக்கி..?) வரவேற்றது.... சாலையில் ஒரு ஆட்டோ சென்றது.. ஒருவர் இரு சக்கர வாகனத்தின் பின் பால் பைகளை ஒரு டப்பாவில் வைத்து எடுத்து சென்று கொண்டிருந்தார்... 24 மணி நேரமும் யாரவது இயங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

எழுத உந்துதல் வந்து விட்டால் தடை போட முடியாது.... கணினியில் சென்று அமர்ந்தேன்... தெற்குப் பார்த்து இருக்கும் சன்னலைத் திறக்க காற்று சில்லென்று வீசியது....(இந்த மாதங்களில் அப்படித்தான்). வெளியெ அடுத்த வீட்டு கருவேப்பிலை மரம் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருந்தது... யாருக்காக / எதற்காக என்று தெரியவில்லை...

****

நான் இப்போழுதுதான் இந்த அதி காலையில் விழிப்பது....
மதியம் சிறிது நேரம் தூங்குவதால் இரவு ஆறு மணி நேரத்துக்கு மேல் தூக்கம் தேவைப் படுவதில்லை... படிக்கும், வேலைக்கு செல்லும் போழுதெல்லாம் பின் தூங்கி பின் எழுவதே வழக்கம்... விடிய விடிய விழித்திருந்த நாட்களும் உண்டு... "டேய்.....! ராக் கொட்டம் அடிக்காதே.....!" என்று அம்மா கத்துவது இன்றும் காதில் ரீங்காரம் இடுகிறது...

****

"Cyclostyling" கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 'style' லாக 'cycle' ஓட்டுவது அல்ல... இது ஒருவகைப் பிரதி எடுக்கும் முறை... இப்பொழுது முற்றிலும் வழக்கில் இல்லை... Xerox-ன் வருகையால் அது மடிந்து விட்டது.. ஆனால் கல்லூரிக் காலத்தில்(1972) ஒரு சமயம் ரூ25/- சம்பாதிக்க உதவியது..... இரவு முழுதும் 'cyclostyle' மெசினை 'கடக்.... கடக் , என்று சுற்றி பிரதி எடுத்ததில் ரூபாய் 'இருபத்தி ஐந்து' வருமானம்.. (பெரிய தொகை). அன்று நள்ளிரவில் குடித்த 'டீ'யின் சுவை இன்றும் நாவில் இனிக்கிறது...

அதன் பிறகு ஒரு முறை கிராமத்திற்கு செல்ல வேண்டிய கடைசிப் பேருந்தைத் தவற விட்டதால்... அந்தப் பேரூரில் இரவுக் காட்சிப் பார்த்து விட்டு, பேருந்து நிலையதில் தூங்கியதும் உண்டு . (வீட்டில் திட்டு வாங்கியது தனிக் கதை)

****

ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு வேலை செய்யும் நம்மவர் பலர் இரவெல்லாம் விழித்து பகல் தூங்குகிறார்கள்....

அவர்கள் உலகம் தனி....
அவர்கள் பிரச்சினைகள் தனி....
அவர்கள் மன உளச்சல்கள் தனி....
அவர்களுக்கு உள்ள உபத்திரவங்கள் தனி....

வாங்கும் காசுக்காக (கூடுதலோ, குறைவோ) எப்படிப் பட்ட biological adjustment செய்து வாழ்கிறார்கள் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்...

*****

பக்கத்து கருவேப்பிலை மரத்தில் இரண்டு குயில்களில் ஒன்று அருகில் உள்ள மற்றொன்றை சின்னதாக 'கு' என்று அழைக்கிறது...

இங்கே எனது கிளி காப்பியுடன்...!
குயில் இல்லையா...... எங்கிறீர்களா.....? குயிலும்தான்.......!

----- முரளி

எழுதியவர் : முரளி (27-Jun-15, 7:35 am)
பார்வை : 144

சிறந்த கட்டுரைகள்

மேலே