ஆலயம்
திகட்டத் திகட்ட சுகித்தாலும்
தேனுள் இன்பம் சலிக்காதே
அண்டம் இன்றும் சுழலுவதேன்
அன்பே அணுவாய் விதைப்பதனால்
நெஞ்சம் யாவும் ஓர்நிலையில்
கண்கள்மூடி சேர்ந்திருந்தால்
வஞ்சம் காவும் போர்நிலைகள்
வாஞ்சை திரளும் திடலாகும்
தீயாய் தருணம் சுட்டாலும்
குளிராய் அன்பே தென்றலிடும்
வீழ்வின் ஆழம் தொட்டாலும்
துளிர்க்கும் வேரது அன்பிலெழும்
மதங்கள் நூறாய் மலர்ந்திடினும்
ஆயிரம் பெயரால் அழைத்திடினும்
மனமெனும் கோயில் ஒன்றேதான்
அன்பே வாயில் இறையும் அன்பே!