பயணம்

விட்டத்தைப் பார்த்துக்கொண்டே
திட்டங்கள் தீட்டிக்கொண்டு
வட்டத்தைத் தாண்டிச்செல்லும்
பட்டற்ற காட்டுக்குள்ளே

தித்திக்கும் கள்சுமக்கும்
எத்திக்கும் பூமணக்கும்
தித்திமி நதியின் ஜதியில்
சித்தத்தில் பாசுரக்கும்

குன்றாகி நிற்கும் வலிகள்
கொன்றென்னை யாசிப்பதோ
வென்றாக வேண்டும் வழிகள்
அன்றாடம் வாசிக்கின்றேன்

கண்மூடும் நொடியின் பயணம்
பொன்னேடின் பதிவும் விரியும்
விண்ணோடும் தொடரும் பாதை
கொண்டாடும் உயிர்மெய் புரியும்.

எழுதியவர் : மதுமதி . H (27-Jun-15, 1:36 pm)
சேர்த்தது : மதுமதி H
பார்வை : 61

மேலே