இது தான்

புரிந்தால்தான் கவிதை
புரியாதது புதிர்

அறிந்தால் தான் அதிசயம்
அறியாதது இரகசியம்

தெளிந்தால் தான் நீரோடை
தெளியாதது குழம்பிய குட்டை

பேசினால் தான் தீர்வு
பேசாதது குழப்பம்

இலேசானது தான் இயற்கை
கடினமானது செயற்கை

பாபத்தினால் தான் நாசம்
பாசத்தினால் சந்தோசம்

போகத்தினால் தான் பருவம்
போதனையால் தான் விழிப்பு

யோகத்தினால் தான் லாபம்
யூகத்தினால் தெளிவு

ஆராய்ச்சியினால் தான் விஞ்ஞானம்
ஆசையினால்தான் அழிவு

சோதனையால் தான் வெற்றி
சோம்பலினால் தோல்வி

அழுவதனால் தான் ஆறுதல்
அணைப்பதனால் அன்பு

கோபத்தினால் தான் கோழை
கோணத்தினால் கோலம்

எழுதியவர் : பாத்திமா மலர் (28-Jun-15, 12:19 pm)
பார்வை : 90

மேலே