வெளிநாட்டு வாழ்க்கை

மணி 5"ந்து விடிஞ்சிட்டா ?

மணி 6 குளிக்கணும் ,மற்றவை ..பாத்ரூம் காலியா இருக்குமா ?

மணி 7 பஸ் இருக்குமா ?

மணி 8 வேலை ஆரம்பம் .....

மணி 9 மேனேஜர் வர்றான் பதில் சொல்லணும் ....

மணி 10 எதாவது குறுந்தகவல் வந்து இருக்கா ?

மணி 11 வீட்ல ,நண்பர்கள் நலமா உள்ளார்களா?

மணி 12 பசிப்பது போல் உள்ளது ..சாப்பிடனுமா?

மணி 1 தண்ணீர் குடிக்கவே இல்ல ,,மறந்தே போய்டேன்

மணி 2 மறுபடியும் குறுந்தகவல் யாரு அனுப்ப போறா ?

மணி 3 என்ன வாழ்கைடா இது .......

மணி 4 ஐயோ இன்னைக்கு என்ன சமையல் ?

மணி 5 வேலை முடிந்தது .......

மணி 6 சமைக்கணுமா ?சாப்பிடனுமா ?

மணி 7 உப்பு, உரப்பு ஏதும் இல்லை இதையா சாப்பிடணும்...........

மணி 8 எழுத்து தளத்தை பார்போம் ....

மணி 9 தூக்கம் வருமா ?

மணி 10 தூக்கம் ,தூக்கம் ..ம் ம் ......

மணி 11 தூக்கம் வரல துக்கம் தான் வருது ..

மணி 12 தூங்கிட்டேனா?
1..2..3.. 4...

மணி 5 விடிஞ்சிட்டா ....உயிரோடுதான் இருக்கிறேன்

எழுதியவர் : ராஜா (28-Jun-15, 11:42 am)
பார்வை : 123

மேலே