எங்கே

சும்மாடு
கட்டிய தலையில்
ஏற்றப்பட்ட
மண்பானையில்
நீரோ
மோரோ
பதநீரோ
சுமந்து கொண்டு
நேர்ப்பார்வை
பார்த்தபடி
கைவீசி நடக்கும்
கம்பீரப் பெண்களை
எங்கே தொலைத்தது
என் கிராமம் ?

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (28-Jun-15, 11:41 am)
Tanglish : engae
பார்வை : 95

மேலே