வாழ்வின் மயக்கங்கள்
மனிதவாழ்வில் மயக்கங்கள் அவை அடுத்தடுத்து பின்னப்பட்ட தொடர்சங்கிளிகள்
கருவாய் தாய் வயற்றில் உறக்கத்தில் மயங்கினோம்
குழந்தையாய் இருந்தவரை விளையாட்டில் மயங்கினோம்.
பள்ளிபருவத்தில் பலகுரும்புகள் அவைகளை சொல்லிமாளது அத்தனையும் சுவையான மயக்கங்கள்,
இளமை பருவம் மயக்கங்களின் உறைவிடம்,
காணும் பொருள், பேசும்வார்தை செய்யும்செயல் இவை அத்தனயுளும் எதோ ஒருவித மயக்கத்தின் தாக்கம்,
இரவு முழுவதும் நிலவுக்கு போட்டியாய் நண்பர்களுடன் அரட்டை,
காலை கதிரவனை காண பிடிக்காத கண்களோடு தலையனையை அணைத்தவாறு இதமான மயக்கம், அதில் கனவுகளின் தோரணங்கள், பூத்துகுலுங்கும் பற்பல பூக்களாய் நம் ஆசைகள்,
சில வாசம் வீசின சில உதிர்ந்து வீழ்ந்தன
இதோ என்னை போன்றே பலரும் இதே மயக்கத்தில்தான்,
வாசம் வீசிய காலங்களை எண்ணியும் அதில் கைசேராமல் உதிரிந்த பல பூக்களை நினைத்தபடியே எதிர்காலத்தை பற்றிய மயக்கங்கலோடு இந்த பயணம் எதை தேடி?
இறைவா எந்தமனிதணும் விரும்பாத மரணதில்லாவது முடியுமா இந்த மதிமயக்கும் மயக்கங்களின் மாறுபாடுகள்!!!