மனிதா உனக்கும்தான்

பச்சை மாறி பழுப்பாகி
பருவம் முதிர்ந்து சருகாகி
மிச்ச மின்றி மண்ணாதல்
மரந்தரு கிளைக்கு மட்டுமல்ல,
இச்சை உடலில் கொண்டவனே
இதுவும் முதுமை வந்தழியும்,
நிச்சயம் இதனை நினைத்திருந்தால்
நிம்மதி வாழ்வில் நிலைத்திடுமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-15, 6:46 am)
பார்வை : 63

மேலே