விழிகள் என்னும் முகவரி
விழிகள் என்னும் முகவரி
======================
அந்த கடிதத்தை எழுதியது
யாரோ தெரியவில்லை
கொண்டுவந்து கொடுத்தவள்
விழிகள் என்னும் முகவரி சொல்லி
உள்ளுக்குள்
ஓயாத இரைச்சல் தந்து
அதோ தூரே தூரே
கரும்புள்ளிபோல் மறைந்துவிட்டாள்
விசேஷ வீடுகளில்
விருந்தாளிகள் வந்துபோனதுபோல ம்ம்
அவள் சேலை மறைத்த
நிறக்கண்ணாடி
வளையல் சிணுங்கல்கள்
என் வயதைத்தட்டியது ம்ம்ம்ம்
அன்றிலிருந்துதான்
அனுசரன்

