ஈகோ
கர்வம் பிறந்தது காதல் தொலைந்தது
உனக்கும் எனக்கும் ஈகோ பிறந்தது
ஈகோ பிறந்தது காதல் விலகிட
விடைகொடு என்றும் என்னை கேக்குது
வேடேந் தாங்கள் பறவையை போல் -நெஞ்சம்
விழிமேல் விழிவைத்து தாகம் தீர்க்குது
கரையான் புத்தில் பாம்போ நுழையுது
உன்னிடம் பேச உள்ளம் துடிக்கிது ஆனால்
ஏனோ கண்கள் வெறுக்குது
சொல்லடியே சொல்லடியே இது பிறந்தது எங்கே
நில்லடியே நில்லடியே இது வளர்ந்தது எங்கே
காதல் ஒருமுறை தோத்து பாக்குது
இதயத்தில் ஒரு வலி தொத்தி கொண்டது
உடல் மட்டும் ஏனோ தனியாய் கிடக்குது
உயிர் மட்டும் ஏனோ உன்னை தேடுது
உன்ன கல்யாணம் தான் செய்வேனென்று
சொன்னாயே நீயும் கண்மணியே
இப்போ என்ன பாத்தாலுமே
வெறுக்கும் காரணம் சொல்லடியே.

