என் காதல் மெய் உன் காதல் பொய்
என் காதல் மெய் உன் காதல் பொய்
நீயெனக்கு காதலை
சொன்ன போது
எனக்கு வயது பதினைந்து
உனக்கு வயது இருபத்தியொன்று
எனக்கு நீ முதல் ஆண்
உனக்கு நான் மூன்றாவது பெண்
என் தேவை வேறு
உன் நோக்கம் வேறு
எனது கற்பனையும் கனவுகளும்
உள்ளம் சார்ந்தது
உனது வர்ணனைகளும் வார்த்தைகளும்
உடல் சார்ந்தது
நம் சந்திப்புகள் அனைத்தும்
எனக்கு தேடுதலுக்கானது
உனக்கு தொடுதலுக்கானது
நமக்கிடையேயான இரகசியங்கள் எனக்கு என்னிடம் மட்டும்
உனக்கு உன் நண்பர்களுடன் சேர்த்து
என் சிந்தனை
குடும்பம் சமூகம் சார்ந்தது
உன்னுடையது உடம்பும் மோகமும் சார்ந்தது
ஒவ்வொருத் தனிமையான சந்திப்பிலும்
நான் நம் காதலை பலப்படுத்த நினைத்தேன்
நீ பலவீனப்படுத்தினாய்
என் தாகம் உயிரையும் உறவையும் சார்ந்தது
உன்னுடையது உடலையும் உறவையும் சார்ந்தது
நான் உன் குறைகளை நிராகரித்து நிறைகளைக் கொண்டாடினேன்
நீ என் நிறைகளை நிராகரித்து குறைகளுக்குக் குற்றம் கண்டுப்பிடித்தாய்
நான் உன்னுடன் நீண்ட முழுமையானப் பயணத்தை நோக்கி..
நீ எவ்வளவு சீக்கிரம் முடிக்கலாம் என்று காத்திருந்தாய்
அனைத்தையும் தாண்டி
நான் நம் காதலை தொடரவும் பலப்படுத்தவும் நினைதேன்
நீ இன்னொருப் பெண்ணை தேடும் வரை
எனது வலி இன்னும் தொடர்கிறது
உன்னை இழந்ததற்காக அல்ல
நம் காதல் தோற்றததற்காக
ஏனெனில் என் காதல்
மெய் சார்ந்ததல்ல
மெய்யானது

