கடவுள்

கண்கள் அறியா
தூயக்காற்றே
கடவுளானால்.??

காற்றை பரப்ப
கொள்கை எதற்கு.?

காற்றை சுவாசிக்க
காணிக்கை எதற்கு.?

காற்றை வைத்து
கலகம் எதற்கு.?

காற்றின் மீது
உரிமை எதற்கு.?

காற்றிற்கு வீணாய்
உருவம் எதற்கு.?

நல்லமனமே வாசமாகி
தூயக்காற்றாகிறது.!

தீயமனம் காற்றில்
நுழைந்து துர்நாற்றமாகிறது.!

உனக்குள் காற்று உலவுகையில்
எங்கே செல்கிறாய் அதை காண.??

எழுதியவர் : பார்த்திப மணி (4-Jul-15, 2:17 pm)
Tanglish : kadavul
பார்வை : 170

மேலே