மென்மையான காதலி
பூவை முத்தமிட்டாள் மலர்ந்த
பூ இதழைத்தான் முத்தமிட்டாள் அவள்
இதழிலோ காயம் ! அவனின்
முத்த மருந்திலே மொத்தமும் சரியாக
பஞ்சுமெத்தையிலே அஞ்சுகத்தை கிடத்த அவளின்
பட்டுமேனி பதறி போக! அவன் பத்து விரலால்
மெய்யணைக்க! பூவும் பஞ்சும் வலித்த அவளுக்கு
மெய்யோடு மெய்யாய் அணைக்க மெய்மறந்தாள் !