நினைவுகள்
மாலை நேரம்,
ஜன்னல் ஓரம்,
இமை மூடி நின்றிருந்தேன் …….
லேசான காற்று
இளம் தென்னைகீற்று அசைந்தன …………
என் நெற்றியை
வருடிய காற்று,
என் காதோரம்
வீசிய தென்றல்,
தென்றலில் கலைந்த
என் செவியோர குழலை
என்னவன் தீண்டவே
என்னவனின் மார்பினில்
என் தலைசாய்த்து ,
என் வெட்கத்தை ,
அவன் மார்போடு
புதைக்கவே ஆசைகொண்டு
சட்டென்று தலை சாய்த்தேன்,
விழியோரம் ஈரம் கசிந்தது …
இமை திறந்து பார்த்தேன்
மனமுடைந்து போனேன் …….
அவன் என்னருகே இல்லை
என்று கதறினேன் ……
வலியோடு அறிந்தேன்
என்னை தீண்டியதும் ,
தழுவியதும் …..
தென்றல் போல வந்த
என்னவனின் நினைவுகளே என்று ……….