உலகின் சிறந்த கவிதை

ஆமாம் எனக்கு நன்றாக தெரியும்
அது உலகில் சிறந்த கவிதைகளில்
ஒன்றாக ஆகியிருக்க கூடும்..

படித்திருந்தால் நீங்களும் சொல்லியிருக்கலாம்
ஆமாம்
இது உலகின் சிறந்த கவிதையென்று..

அக்கவிதையின் கைகளில் விலங்கிட்டு
காகிதத்தில் பூட்டியிருப்பேன் உங்களிடம் காட்ட
என்னிடம் ஒரு எழுதுகோலும்
வெற்றுக் காகிதமும் இருந்திருந்தால்...

எழுதியவர் : மணி அமரண் (5-Jul-15, 1:57 am)
பார்வை : 4728

மேலே