உனக்கான அடையாளங்கள்

எதனால் என்னை பிடிக்கிறது என்றாய்..
என்னவோ பிடிக்கிறது உன்னை!
எதுவோ இருக்கிறது உன்னில்..
கன்னக் குழியழகில்
விழுந்துவிட்டேனோ?
மஞ்சள் நிரத்தழகில்
மயங்கிவிட்டேனோ?
அதிராத பேச்சழகில்
அடங்கி விட்டேனோ?
ஆம்! ஆம்! ஆம்!
எல்லாமும் தான்..
இருந்தாலும்,
ஆண் பெண் பாராமல்,
நட்போடு பழகுவதும்
யாரையும் புண்படுத்தாமல்,
வார்த்தைகளை வெளிப்படுத்துவதும்
முகம் சுளிக்காமல்,
வேலைப்பளு ஏற்பதிலும்
துன்பத்தில் துவளாமல்,
அன்பாகப் பேசுவதும்
எல்லோரிடத்திலும்,
அக்கறையோடு இருப்பதிலும்..
இப்படி உனக்கான அடையாளங்கள்
என் மனதில் ஏராளம்! என் அன்பே!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (9-Jul-15, 1:04 am)
பார்வை : 285

மேலே