தொலைந்தவன் கிடைத்துவிட்டான்

சில நாட்களுக்கு முன் அவன் தொலைந்துவிட்டான்....

நன்றாக தேடிப்பாருங்கள்....

எங்காவது

மழைத்துளியினுள்ளோ,
பனித்துளியினுள்ளோ, மறைந்திருப்பான்.

வானவில்லில் வளைந்திருப்பான்.

மேகத்தோடு சுற்றித்திரிந்து கொண்டிருப்பான்.

பறவைகளோடு பேசிகொண்டிருப்பான்.

கவிதை என சொல்லிக்கொண்டு
காகிதத்தில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பான்.

இல்லை இல்லை

அவன் கிடைத்துவிட்டான்

எங்கோ அவன் வாடை அடிக்கிறது....
இதோ கண்டுவிட்டேன்...

அவன்........!!! அவன்............!!!

அலுவலகத்தின் கோப்புகளில்

மங்கிய அச்சுப்பதிவுகளின்

மத்தியில் தூசியோடு தூசியாய் படிந்திருந்தான்....

எழுதியவர் : ம கோபி (9-Jul-15, 11:28 pm)
பார்வை : 88

மேலே