வலியின் விதைப்புகள்-ரகு

உடலில் செருகிய
சிறுகத்தியோடு ஊர்த்துவமிட்டுக்
கிளை ஏறினாலும்
ரத்தம் சிந்திய அவ்வணில்
செத்து விழுந்தே
வலி தீர்த்துக் கொண்டது
வலைக்கு சிக்கிய
மற்றொன்று கணப் பொழுதின்
கல்லடியில் வலி துறக்க வாய் பிளந்தது
பின் பொழுதில்
அவைகளை போதைக்கு
ஊறுகாய் ஆக்கிக் கொண்டவன்
மயங்கிக் கிடக்க
எங்கிருந்தோ ஓடிவந்த
சில அணில்கள்
அவன் மூச்சுக் காற்றை சுவாசித்து
அழுது திரும்பின

எழுதியவர் : சுஜய் ரகு (10-Jul-15, 1:07 pm)
பார்வை : 284

மேலே