எனது தூரிகை

என் எண்ணங்களின் கசிவுகளை
உன் முள்ளில் கசிந்தாய் !

சிலநேரங்களில் உன் இயலாமையை
என் விரலில் கசிந்தாய் !

தேர்வறையில் நடுநடிங்கி தவித்தாய்!

காதல் கடிதம் எழுதும் போது
கர்வபட்டுகொண்டாய்!

என் விழிநீர் சொரியும் போது
கவி நீர் படைத்தாய் !

மொழி தெரிந்த நாள் முதல்
பொறி ஒன்றாய் மாறினாய் !

நாவில்லை என்றாலும்
நீ போதும் எனக்கு .

எழுதியவர் : vramakrishnan (10-Jul-15, 3:33 pm)
Tanglish : enathu thoorikai
பார்வை : 89

மேலே