ரகசியம்
ரகசியம்
தூக்கணாங் குருவி கூடுகள் பார்க்கவே அழகாக இருக்கிறதல்லவா? அதில் ஒரு ரகசியம் இருக்கிறது..பெரும்பாலான பறவைகளில் பெண் பறவைகள்தான் கூடுகட்டும் வேலையை ஆரம்பிக்கும்.
ஆண் பறவைகளும் உதவி செய்வது உண்டு. ஆனால் தூக்கணாங் குருவிகளில் கூடுகளைக் கட்டுவதே ஆண் குருவிகள் தான்.
பெண் குருவிகளை கவர ஆண் குருவிகள் போட்டி போட்டு கொண்டு அழகிய வடிவமைப்பு நிறைந்த கூடுகளை கட்டுகின்றள.
பெண் குருவி அந்த கூட்டிற்கள் வந்து பார்க்கும். முட்டையிடுதல் உள்ளிட்ட எல்லா விஷயங்களுக்கும் அந்தக் கூடு வசதியாக இருக்குமா? என்பதை பார்த்து பெண் குருவி திருப்தி அடைந்தால் தான் ஆண் குருவியுடன் சேர்ந்து குடும்பம் நடத்துமாம்.