கல்லறை கீதங்கள்

என்னை விட்டுச்சென்று என்
கல்லறை பயணத்திற்கு கொடி
அசைத்தவளே.!

நம் பாதங்கள் அறியும் நூற்றில்
நம் காலணி எதுவென,இருளிலும்.!
அதுபோல்
கல்லறை இருளில் நான் இருந்தாலும்
உன் பாதத்தின் பயணம் என்
கல்லறை நோக்கி வருவதை உணர்வேன்.!!

ஆயிரம் சுவாசங்கள் காற்றில்
கலந்தாலும்,உன் சுவாசத்தை
பிரித்து அறியும் அன்னமடி நான்.!!

நான் உன் வாசல் தேடி
வந்தபோது ஓடி வராத நீ.??
இன்று எங்கோ ஒரு கல்லறையில்
உறங்கும் போது தேடி வருவதேன்.??

உன் குற்ற உணர்ச்சிக்கு
மருந்து தேடி வந்தாயோ.?

கல்லறை புற்களும் நம் கதைகேட்டு
ஒப்பாரி வைக்கையில்.! எனக்கான
உன் அழுகை இன்னும் என் காதில்
விழவில்லையே.?

நம் காதலை போல அழுகையையும் மனதிற்குள்ளேயே புதைத்து
விட்டாயா.?

உன் காதலை காணாததால் அன்று
கல்லறை உறக்கம் கொண்டேன்.!
இன்று
எனக்கான உன் அழுகையையும்
கேட்காமல் கல்லறை உறக்கத்தையும் தொலைத்தேனே.!!

காற்று புகாத கல்லறை கேட்டேன்
காதல் புகாத கல்லறையை
கேட்க மறந்தேனே.!!

இந்த காதலில் மூளையும் இதயமும்
நட்பு கொள்வதே இல்லை.!!
கல்லறைக்கு நீ வர மூளை
எதிர்ப்பு கூறினால், இதயமோ.!
உன் வீட்டிற்கும் கல்லறைக்கும்
பாதை அமைக்கிறதே.?

கல்லறையிலும் என் இதயம்
என் பேச்சை கேட்காதபோது
என் செய்வேன் உன்னை மறக்க.!!

இந்த காதல் ஒரு அனிச்சைசெயல்
அது மூளையின் சொல் கேட்டு
நடப்பதேயில்லை.!!

வெந்நீரில் குளிப்பவன் மீது குளிர்நீரை ஊற்றியதுபோல
சிலிர்த்து போனேன் உன் விரல்
என் கல்லறையை தொடும்போது.!!

மறக்காமல் என் நினைவு நாளில்
என் கல்லறையை தேடிவந்து நீ ரோஜா வைக்கும் போதெல்லாம்.!!

மறக்காமல் உன் பிறந்தநாளில் உன்னை தேடிவந்து நான் ரோஜா கொடுத்து சென்றதையே நினைத்து கொள்வேன்.!!

அன்று ஒருநாள் மட்டும்
என் கல்லறையிலும்
காதல் கீதங்களே.!!

கண்ணில் கண்ணீரோடு....

எழுதியவர் : பார்த்திப மணி (11-Jul-15, 11:44 pm)
Tanglish : kallarai keethangal
பார்வை : 639

மேலே