கல்லறை ரோஜாக்கள்

காதலியே.!!

நம் காதல் விதையை மீண்டும்
உன் மனதில் தூவிவிட்டேன்.!!
தினம் என் நினைவுகளை
உன் மனதில்
மண்புழுவாய் கிளறுகிறேன்,
நம் காதல் விதைக்கு உரமாக.!!

என் நினைவில் நீ சிந்தும் ஒவ்வொரு
துளி கண்ணீருமே நம் காதல்
விவசாயத்திற்கான தண்ணீர்.!!

என் நினைவு என்றும் உன் மனதில்
இருந்து, உன் கண்ணீரில் நம் காதல்
ரோஜா மலர்ந்தால்.! அதை
என் கல்லறைக்கு வைத்து விடு.!

ஆனால்.!!

என்று எனக்கான கண்ணீர்
உன் விழியில் இல்லையோ
அன்றே என் காதல் ரோஜா
வாடிவிடும்.!!

அதை என் கல்லறையில் நட்டுவிடு
என் கண்ணீர் அதற்கு உயிர் கொடுக்கும்
உன் கூந்தலில் அதை சூடிக்கொள்..

உன் கூந்தலுக்கான ரோஜாக்கள்
என்றும் என் கல்லறையிலிருந்தே.!!

எழுதியவர் : பார்த்திப மணி (12-Jul-15, 12:46 am)
Tanglish : kallarai rojakkal
பார்வை : 321

மேலே