அம்மா
அம்மா
விடு விடு விடு விடுமச்சி
எல்லா துன்பமும் பறந்து போகும்
படு படு படு படுமச்சி
அம்மா மடில படுமச்சி
துன்பமெல்லாம் இன்பமாகும் டா
நம் வாழ்வில்
பீலீங்ஸ் கூட டான்ஸ் ஆடும்டா - மச்சி
பியர் கூட ஓடி போகும்டா
அம்மிக்கல்ல கால்ல போட்டாலும்
அசையாம நிற்பா பாருடா அவ
வலியை கூட சிரிப்பா மாத்துவாடா
சின்ன கல் தடுக்கி நாம விழுந்தா
வலியால துடிச்சுடுவாடா மச்சி
கண்ணீரால நனைச்சுடுவாடா
வேளவெட்டி போகாம
தெருத்தெருவா சுத்திபுட்டு
வீட்டுப்பக்கம் போகும்போது
நடுநிசி ஆயிருக்கும்
நாய் கூட தூங்கியிருக்கும் டா - மச்சி
நம்ம அம்மா மட்டும்
வாசல்ல தூங்காம படுத்திருப்பாடா
நமக்காக காத்திருப்பாடா
மாதக் கடைசி ஆகிருக்கும்
மளிகை கடைகாரன் திட்டியிருப்பான்
வெந்த சோத்தை தின்னுபுட்டு
வேளைக்கு போயிருப்பா
ஊர சுத்திட்டு வந்த எனக்கு
கடனுக்கு கடுப்பான் வாங்கி
எனக்கு மட்டும் தந்துடுவாடா - மச்சி
கரைக்ட் டைமுக்கு வந்திடுவா
எனக்கு மட்டும் தந்துடுவாடா
காதலுக்கு சண்ட போட்டு
நண்பனுக்காக மண்டய உடச்சு
நடுரோட்டில் அடி வாங்குவோம்
ஒரு நாயும் தடுக்க வாராது
என் தாய் மட்டும் ஓடி வருவாடா
என்னைக் காக்கா பாடுபடுவா டா
தண்ணி அடிச்சு தகராறு பண்ணி
ஊர பகச்சு உதயும் வாங்கி
பொறுக்கியா அழஞ்சு திரிஞ்சு
பொறம்போக்கா வாழ்ந்தாலும்
என்ன வெறுக்காத ஓர் உயிர் மச்சி
எனக்காக வாழும் உயிர் மச்சி
அம்மா …….