என் தாய்க்கு

அழகழகான துளிகள்
அம்மா உன் அன்பில்
என் கல்பில் உருவான வரிகள் இவை
என் பேனா ஏந்தி துவங்குகிறேன்
முதன் முதலாய்
உன்னை எழுதிட..............

கருத்தெறித்த நாள் தொட்டு
உரு பெற்று வையகம் காணும்
நாள் வரை
வயிற்றில் என்னை வளர்க்க
பத்தியம் காத்து
பத்து மாதம் சுமந்தவளே !
தந்தையொரு மனம் செய்து கொள்ள
பெத்த மகள் என்னை பிரிந்து போனாய்
ஒரு நாளில் ஒரு வயதிலாம்,
அயல் நாட்டுப் பணிப் பெண்ணாய்
அரைக் காலம் கழித்தாய்.......

என் நா பேசிய முதல் தருனத்திலும்
நான் நடை பயின்ற நேரத்திலும்
நீ இல்லையம்மா
நீண்ட நாள் உன் அன்பில் வாழ்ந்திட
வரமொன்று எனக்கு
கிடைத்திடவில்லை....
உன் தனங்களில் நான் பசியாறிய
நாட்களும்,
உன் பக்கம் உறங்கிய
நாட்களும் சிலவாம்.......

எனக்காக எங்கோ நீ படும் கஷ்டங்கள்
கஷ்டமின்றி வாழ வைக்கிறது
என்னை இங்கே;
நான் உன் வயிற்றில் வளரும்
வேளையில்
என்னன்ன கற்பனையில் நீ
மிதந்தாயோ நானறியேன்,
வையகத்தில் நான் வளருகையில்
உனக்கு பாரமானதைதான்
அறிவேன்
உன் அன்பில் வாழ்ந்திட நானும்
என் அருகில் வாழ்ந்திட நீயும்
தவித்ததில்லையா
தனித்து வாழ விட்டதில்லையா
விதி........

அன்பின் வடிவமே,
அழகின் தாய் உருவமே
உன் சுமைகளை நான் சுமப்பேன்
நீ வந்து என் அருகில்
வாழ்ந்து விடு.....
ஆகாசம் வரை நான் உயர்ந்தாலும்
உன் அன்புக்குதான்
என்றும் நான்
அடிமையம்மா......

...........Askiya...........

எழுதியவர் : M.F.ASKIYA (12-Jul-15, 12:58 pm)
Tanglish : en thaaiku
பார்வை : 366

மேலே