அம்மா

ஆரிராரோ பாட்டுப் பாடி
'ஆ'வண்ணா எழுதச் சொல்லி
ஐயிரண்டு மாதங்களாய்
பக்குவமாய்ப் பாத்துப் பாத்து
என்னைப் பெத்தெடுத்த "அம்மா"
உன் முன்னாடி தெய்வமெல்லாம் சும்மா ......


சோறூட்டித் தாலாட்டி
ராப்பகலாக் கண்விழிச்சு
ராஜா ராஜன் மகனைப்போல
குறை ஒன்னும் வச்சதில்ல ....
குரும்பபாளையச் சோலையிலே.....


பஞ்சத்துல பிழச்சபோதும்
பட்டினியப் பாத்ததில்ல ...
பசிய நானும் கண்டதில்ல ...
நீ பத்துமாசம் சுமந்த பிள்ளை...
என்னைப் பெத்தெடுத்த "அம்மா"
உன் முன்னாடி தெய்வமெல்லாம் சும்மா ......


உன்ன விட உலகத்துல
ஒசந்தது எதுவுமில்ல ...
சோதனைகள் வேதனைகள்
நம்மை விட்டுப் போகும்காலம் ....
பிறக்குது நல்ல காலம் .....


பரணியில் பிறந்த அம்மா
நீ தரணியை ஆளும் நாள்..
நமக்கினித் தூரமில்ல .....
நீ செஞ்ச தர்மமெல்லாம்
உன்ன வாழ வைக்கும் காலம் வரும்...


சொந்தமெல்லாம் சொக்கினிக்க
வசை பாட வந்தவங்க
வாயடைச்சுப் போகும் காலம்...
வாசலிலே நிக்குதம்மா ....
நமக்கினி வசந்தகாலம்..




எனக்கு வாழ்த்துச் சொல்ல வயசில்ல....

அன்றும் இன்றும் என்றும்
எனது ஒவ்வொரு வெற்றிக்குப்பின்
உள்ள பெண் என் "அம்மா".....


ஆரிராரோ பாட்டு பாடி
'ஆ'வண்ணா எழுதச் சொல்லி
ஐயிரண்டு மாதங்களாய்
பக்குவமாய் பாத்து பாத்து
என்னைப் பெத்தெடுத்த "அம்மா"
உன் முன்னாடி தெய்வமெல்லாம் சும்மா ......

எழுதியவர் : தமிழ்நேசன் (யோகேஷ் பிரபு இ (13-Jul-15, 10:26 pm)
Tanglish : amma
பார்வை : 133

மேலே