என் உயிர் அம்மா
என் தாயின்
பாசம் தெரியாமல்
பிறக்கையில் அழுதேன்
நான்
உதைத்ததை நினைத்திருப்பாளோ என்னமோ
அழுதுகொண்டே முத்தமிட்டாள்
புன்சிரிப்புடன்
அன்பு என்னும் அர்த்தத்தை
சிரிப்பின் முத்தத்தோடு
உணர்த்தியவள் என் தாய்
அழுதேன் ,
தவழ்ந்தேன் ,
நடந்தேன் ,
பாசம் குறையவில்லை
என் மீது என் தாயிக்கு
என்
முகத்தில் மீசை முளைத்தாலும்
தாயின் மடியில் தூங்கும்
ஆசை குறையவில்லை
படைத்தவன் இறைவன் என்று
விவிலியத்தில் படித்திருந்தேன் -அது
பொய்யானது என் தாய் என்னை ஈன்றேடுத்தபோது
பொய்யான உலகத்தில்
கடவுளும் பொய் என்றேன்
என் தாயின்
மெய் உருவத்தை கண்ட பின்பு